ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல். (அல்லது) மயங்கொலிப் பிழைகளைக் கண்டறிதல்.
| லகர | ளகர | ழகர |
| அலகு – பறவை மூக்கு | அளகு – பெண்பறவை | அழகு – வனப்பு |
| அலி – பேடி | அளி – கொடு | அழி – கெடு |
| அலை – நீரலை | அளை – புற்று | ஆழை – கூப்பிடு |
| ஆல் – ஆலமரம் | ஆள் – ஒருமனிதன் | ஆழ் – மூழ்கு, அமுக்கு |
| இலை – தழை | இளை – மெளி | இழை – நூல் இழை |
| உலவு – நட | உளவு – ஒற்றன் | உழவு – தொழில் |
| ஒலி - ஓசை | ஒளி – வெளிச்சம் | ஒழி – நீக்கு |
| உலை - கொள்ளர் உலை | உளை - பிடரிமயிர் | உழை - பயிற்தொழில் |
| கலை - ஓவியம், ஆடை, கல்வி | களை - நீக்கு, அழகு, பயிரில் முளைப்பது | கழை - மூங்கில் |
| கலி - துன்பம் | களி - மகிழ்சி | கழி - மிகுதி, நீக்கு |
| கிலி - பயம் | கிளி - பறடிவ | கிழி - கிழித்தல் |
| சூல் - கற்பம் | சூள் - சபதம் | சூழ் - திட்டமிடு |
| தால் - நாக்கு, தாலாட்டு | தாள் - பாதம் | தாழ் - பணி |
| வலி - வளிமை, உடல் வளி | வளி - காற்று | வழி - பாதை |
| பாலை - தினை | பாளை - தென்னம்பாளை | பாழை - துன்புறுவோர் |
| ஆலி - மழைதுளி | ஆளி - சிங்கம் | ஆழி - கடல், கடல் மோதிரம் |
| நாலி - முத்து | நாளி - நாய் | நாழி - நாழிகை |
| வாலி - மன்னம் | வாளி - அம்பு | வாழி - வாழ்க |
| வால் - விலங்குஉறுப்பு | வாள் - அறம், கருவி | வாழ் - வாழ்தல் |
| வாலை - இளம்பெண் வாலினை | வாளை - மீன் | வாழை - செடி |
| மூலை - கோடியில் சந்து | மூளை - மண்டை ஓட்டுமூளை | மூழை - துடுப்பு |
| தலை - ஓர் உறுப்பு | தளை - கட்டு, விளங்கு, அடிமை தளை | தழை - இளை |
| குலவி - கொஞ்சு, குலவி | குளவி - வண்டு | குழவி - குழந்தை |
| தாலி - மாங்கல்யம் | தாளி - பனை, கொடி, மருந்துசெடிவகை | தாழி - தாழ்ந்த அகன்ற குதிர் |
| பொலி - விலங்கு, அழகு | பொளி - கொத்து | பொழி - ஊற்று |
| விலா - ஏலும்பு | விளா - மரவகை | விழா - திரவிழா, பண்டிகை |
| விலை - விற்க, மதிப்பு, கிரயதொகை | விளை - விளைவு, அனுபவம் | விழை - விருப்பம், விரும்பு |
| வேலம் - ஒருவகை மரம் | வேளம் - சிறைகளம் | வேழம் - யானை, ஆனை |
| கலம் - அளவு | களம் - போர் நடக்கும் இடம் | |
| கல் - செங்கல் | கள் - மது | |
| காலை - பொழுது | காளை - எருது | |
| குலம் - சாதி | குலம் - நீர் நிலை,குட்டை | |
| கொல் - கொன்றுவிடு | கொள் - தெரு | |
| கோல் - மம்வு | கோள் - கோள்சொல்லுதல், கிரகங்கள் | |
| தலலை - பாத்திரம் | தவளை - உயிரினம் இருவாழ்வி | |
| புல் - பயிர் | புள் - பறவை | |
| வேல் - முருகன் வேல் | வேள் - வேள்வி, யாகம் | |
| வெல்லம் - இனிப்பு | வெள்ளம் - நீர் | |
| வேலை- பணி | வேளை - பொழுது | |
| அகலம் - விரிவு | அகளம் - தாழி, குதிர் | |
| நால் - நான்கு | நாள் - கிழமை | |
| நீலம் - நிரம் | நீளம் - அளவு,நெடு, நீட்டம், | |
| எலும்பு - என்பு விலா | | எழும்பு - எழுந்திரு |
| குலை - பாக்கு குலை | | குழை - குழைத்தல், கலத்தல் |
| வலு - வலிமை | | வழு - பிழை |
| பால் - ஆண்பால் பெண்பால், உணவு | | பாழ் - வரியஇடம் ஏழை எளிய இடம், வீணாகிபோனது |
| | குளி - மூழ்கு | குழி - ஆழம், பல்லம் |
| | சுளி - முகசுளித்தல் | சுழி - வளை |
| | கிளவி - சொல் | கிழவி - மூதாட்டி |
| | விளி - அழை | விழி - கண்திற |
| | தோளன் - தோளை உடையன் | தோழன் - நண்பன் |
No comments:
Post a Comment