Wednesday, September 12, 2018

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

தமிழில் ஒரு சொல்லுக்குரிய எதிர்பதம் எழுதுவதை தான் இப்பகுதியில் கேள்வியாகக் கேட்கப்படுகிறது. சில முக்கியமான தமிழ் சொற்களுக்குரிய எதிர்பதங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நன்கு படித்துக் கொள்ளவும். இப்பகுதி எளிதில் மதிப்பெண் பெற உதவக்கூடிய பகுதி


தேர்வில் கேட்கப்படும் மாதிரி


எதிர்ச்சொல் தருக: 

     தண்மை

1. தட்பம்
 2. மழை
 3. வெம்மை
4. குளிர்

விடை : 3. வெம்மை


தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

  1. இணைந்தது           x          பிரிந்தது
  2. மகிழ்ச்சி                    x         துக்கம்
  3.  நன்மை                 x         தீமை
  4. இன்சொல்             x         கடுஞ்சொல், வன்சொல்
  5. வெப்பம்                   x         தட்பம்ää குளிர்ந்த
  6. நஞ்சு                           x         அமிழ்தம்
  7. இனிய                        x         இன்னா
  8. வெண்மை              x         கருமை
  9. மேதை                      x    பேதை
  10. எதிர்த்தார்              x         வரவேற்றார்
  11. புகழ்                           x         இகழ்
  12. தண்மை                 x         வெம்மை
  13. பெருமை               x         சிறுமை
  14. அறம்                         x         மறம்
  15. ஆக்கம்                     x          கேடு
  16. இசை                          x         வசை
  17. அமைதி                    x         குழப்பம்
  18. இம்மை                     x         மறுமை
  19. உண்மை                  x         இன்மை, பொய்
  20. எளிது                          x          அரிது
  21. ஓய்வு                          x         உழைப்பு
  22. நோதல்                      x         தணிதல்
  23. தட்பம்                        x         வெப்பம்
  24. கனவு                          x         நனவு
  25. மலர்தல்                  x         கூம்புதல்
  26. மறைதல்               x         வெளிப்படல்
  27. அருகு                       x         பெருகு
  28. நல்லறிவு              x         தீயறிவு
  29. பெருகி                     x    அருகி, சுரங்கி
  30.  இரும்பை             x         இன்பம்
  31. பழமை                    x          புதமை
  32. வீரன்                        x         கோழை
  33. இகழ்ந்து               x         புகழ்ந்து
  34. இளமை                 x         முதமை
  35. இகழ்ச்சி               x         புகழ்ச்சி

No comments:

Post a Comment