Wednesday, September 12, 2018

அ.சந்திப்பிழை நீக்குதல்

பகுதி அ - 6.பிழை திருத்தம் 

- சந்திப்பிழை/ஒருமை பன்மை/மரபு பிழை/ வழுவுச்சொல்/பிற மொழிச் சொல்

இந்த வகை வினாக்களில் ஐந்து வகையிலான கேள்விகள் கேட்கப்படலாம்.

அ.சந்திப்பிழை நீக்குதல்

இரண்டு சொற்கள் சேரும் பொது ஏற்படும் மாற்றத்தில் பிழைகளே சந்திப் பிழைகளாகும்.

அதாவது ஏற்கனவே இருக்கின்ற விகுதியோடு இன்னொரு சொல் இணையும் போது ஏற்படும் மாற்றங்கள்.

உதாரணமாக , போர் + செயல் = போர்ச்செயல் என மாறுவதைக் கூறலாம்.

இவ்வகையான வினாக்களுக்கு நீங்கள் தயாராக வேண்டுமென்றால், வல்லினம் மிகும் இடங்கள் மற்றும் வல்லினம் மிகா இடங்கள் எவை என்பவற்றை அறிந்திருக்க வேண்டும். சந்தையில் கிடைக்கும் எந்த ஒரு பொதுத் தமிழ் வழிகாட்டியிலும் இந்த விசயங்கள் உள்ளடக்கியிருக்கும். சமயம் வாய்த்தால் இதைப்ப்பற்றி பின்னர் காணலாம்.

No comments:

Post a Comment