Thursday, September 13, 2018

வினையாலணையும் பெயர் என்றால் என்ன ?

இலக்கண விளக்கம் : "ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உறுப்பு ஏற்றும், ஏற்காமலும் வேறொரு பயனிலையைக்கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் ஆகும்."

வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வரும்.

மேற்கண்ட விளக்கங்களைப்போல் வினையாலணையும் பெயரைக் கண்டறிவது புரியாததோ, கடினமானதோ அல்ல. மிகவும் எளிது. 

உதாரணம் : "கொடு" என்பதன் வினையாலணையும் பெயர் எது ?

அ.கொடுத்து
ஆ.கொடுத்த
இ.கொடுத்தல்
ஈ.கொடுத்தவள்

விடை : ஈ.கொடுத்தவள் (மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வந்துள்ளது)

ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வினையாலணையும் பெயர் என்றாலே ஏதோ ஒருவகையில் "அணைத்து" வருவது போல் வரும், எ.கா. அறிந்தவன், படித்தவர்....

No comments:

Post a Comment