Friday, September 14, 2018

திருக்குறள் தொடர்பான செய்திகள்


1. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் - ஊழியல் (அதிகாரம்: ஊழ்)

2. அறத்துப்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் இயல்களின் எண்ணிக்கை - 38 அதிகாரங்கள், 4 இயல்கள்

3. பொருட்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் இயல்களின் எண்ணிக்கை - 70 அதிகாரங்கள், 3 இயல்கள்

4. இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் இயல்களின் எண்ணிக்கை - 25 அதிகாரங்கள், 2 இயல்கள்

5. திருக்குறளில் ஒரே பெயரில் இருமுறை வரும் அதிகாரம் - குறிப்பறிதல்

6. வழக்கு என்பதன் பொருள்  - வாழ்க்கை நெறி

7. என்பு என்பதன் பொருள் - எலும்பு

8. திருக்குறளில் உள்ள இயல்கள் - 9

9.  படிறு என்பதன் பொருள் - வஞ்சம்

10. திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000

11. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42,194

12. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்

13. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - மூங்கில், பனை

14. திருக்குறளை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர் - ஜி.யூ. போப்

15. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்

No comments:

Post a Comment