Thursday, September 13, 2018

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழமொழி/உவமை ஒன்று கொடுக்கப்பட்டு அதற்கான பொருளை தரப்படும் விடைகளிலிருந்து தெரிவு செய்யவேண்டும்.


உதாரணம் : தமரை இலை நீர் - இவ்வுவமைக் கூறும் பொருள் என்ன ?

அ. தாமரையும் நீரும்
ஆ.மிகுந்த ஈடுபாடு
இ.ஒட்டி இசைந்திருத்தல்
ஈ.பட்டும் படாமலிருத்தல்

விடை : ஈ.பட்டும் படாமலிருத்தல்

இவ்வகை வினாக்களை எதிர்கொள்ள  ஒவ்வொரு உவமைக்கும் சரியான பொருளை நீங்கல் அறிந்து வைத்திருக்க வேண்டும். 6 முதல்  10 வரையிலான தமிழ் பாட புத்தகத்தில் வரும் உவமை/பழமொழித்தொடர்களின் பொருளை புரிந்து படித்தாலே போதுமானது.

சில பழமொழிகளும் பொருளும்

உடுக்கை இழந்தவன் கை போல    - நட்பு
கிணற்றுத் தவளை போல்  - அறிவின்மை
நகமும் சதையும் போல - நட்பு

No comments:

Post a Comment