Wednesday, September 12, 2018

பிரித்தெழுதுக

பிரித்தெழுதுக


தமிழில் சொற்களை பிரித்து எழுதுவதையே இந்தப்   பகுதியில் கேள்வியாக கேட்கப்படுகிறது. பிரிக்க வேண்டிய சொல் ஒன்றை கொடுத்துவிட்டு அதனை நான்கு வகைகளாகப் பிரித்து காட்டி எது சரியான விடை என்று இந்தப் பகுதியில் கேட்கப்படுகிறது.

ஆரயிர்  என்ற சொல் எப்படி பிரியும்?

* அருமை + உயிர்


தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்


ஆரயிர்                 –     அருமை + உயிர்

தீந்தமிழ்                –     தீம் + தமிழ்

பைந்தமிழ்              –     பசுமை + தமிழ்

தண்துளி                –     தண்மை + துளி

மேல்வீதி               –     மேற்கு + வீதி

மற்றோர்                –     மற்று  +ஓர்

மாசில்                  –     மாசு + இல்

மேல்வீதி               –     மேற்கு + வீதி

செவியிற்சுவை   –     செவியின்  +சுவை

உடைத்தென்று   –     உடைத்து  என்று

அங்கயற்கண்     –     அம் + கயல் + கண்

பைந்தளிர்               –     பசுமை+ தளிர்

பேரறும்          –     பெருமை + அறம்

அங்கயற்கண்     –     அம் + கயல் +  கண்

வீற்றிருக்கை     –     வீற்று + இருக்கை

நலமிக்க                –     நலம் + மிக்க

முதுமக்கள்             –     முதமை +மக்கள்

முத்துதிரும்             –     முத்து + உதிரும்

வாயாற்கெடும்    –     வாயால் +  கெடும்

உண்டினிது              –     உண்டு  + இனிது

மெல்லடி               –     மென்மை + அடி

நீணிலம்                –     நீள் + நிலம்

சீறடி                   –     சிறுமை + அடி

அந்நலம்                –     அ + நலம்

நிரந்தினிது              –     நிரந்து + இனிது

செயற்கரிய        –     செயற்கு + அரிய

வள்ளுகிர்               –     வன்மை  + உகிர்

ஆரயிர்                 –     அருமை + உயிர்

இருகரை               –     இரண்டு + கரை

மழுவெடுத்து     –     மழு  + எடுத்து

உனக்குமாகி             –     உனக்கும் + ஆகி

அரவணை              –     அரவு  + அணை

பேரொளி                –     பெருமை + ஒளி

ஈந்தளிப்பாய்      –     ஈந்து + அளிப்பாய்

சிற்றில்                 –     சிறுமை + இல்

நம்மூர்           –     நம் +  ஊர்

பெரும்புனல்             –     பெருமை + புனல்

தீதில்                   –     தீது + இல்

ஐயைந்தாய்             –     ஐந்து +  ஐந்தாய்

வெந்தழல்              –     வெம்மை+ தழல்

கற்பிளந்து             –     கல்  + பிளந்து

நினைவாகி         –     நினைவு + ஆகி

தெங்கம்பழம்     –     தெங்கு + அம் + பழம்

ஊற்றாந்துணை   –     ஊற்று+ஆம் + துணை
 
பேரானந்தம்             –     பெருமை  + ஆனந்தம்

வேறொருபாயம்  –     வேறு  + ஒரு +  உபாயம்

அகநானூறு             –     அகம் +  நான்கு + நூறு

No comments:

Post a Comment