Thursday, September 13, 2018

இலக்கணக் குறிப்பறிதல்

தரப்பட்டிருக்கும் சொல்லுக்கு சரியான இலக்கணக் குறிப்பை கண்டறிதல்.  சில முக்கியமான இலக்கணக் குறிப்பு வகைகள்

வினைத்தொகை

இவ்வகை இலக்கணக்க்குறிப்பில் பகுதி (வார்த்தையின் முதல் பகுதி) வினைசொல்லாக இருக்கும். விகுதி பெயர்ச்சொல்லாக வரும்.

உதாரணமாக் : கனிவாய், அழுதுயர்,அதிர்குரல்


வினைத்தொகை - இறந்த, நிகழ், எதிர் என மூன்று காலங்களுக்கும் பொதுவானது.

உதாரணம் : வளர்மதி -  வளர்ந்த மதி , வளர்கின்ற மதி, வளரும் மதி (மூன்று காலங்களுக்கும் பொதுவாக உள்ளது)


இவ்விரு விதிகளிலிருந்தே நீங்கள் வினைத்தொகையை எளிதாக கண்டறிந்து கொள்ளலாம்.


பண்புத்தொகை

இவ்வகை இலக்கணக் குறிப்பில்  கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தையின் முதல் பகுதி குணம், உருவம், நிறம், எண், சுவை போன்ற பண்பினைக் குறிபதாகவும், இரண்டாம் பகுதி பெயர்ச்சொல்லாகவும் வரும்.

உதாரணம் :  அருமறை, அரும்பொருள், வெண்கொடை. காரிருள்

உவமைத்தொகை


இவ்வகை சொற்களில் , முதல் பகுதி உவமையைக் குறிப்பதாகவும், இரண்டாவது பகுதி பெயர்ச்சொல்லாகவும் வரும்.

உதாரணம் : மலரடி, மதிமுகம், கனிவாய் ( மலர் - உவமை, அடி- (பாதம்) பெயர்ச்சொல்)

ஒரு சொல் உவமைத்தொகையா என கண்டறிய, முதல் பகுதிக்கும், பெயர்ச்சொல்லுக்கும் இடையே  போன்ற, போல என்கிற கொற்களைப் பயன்படுத்தி பார்க்க வேண்டும், சரியான அர்த்தம் கொடுத்தால் அது உவமைத் தொகை ஆகும். (மலர் போன்ற அடி, கனி போன்ற வாய் ...)


எண்ணும்மை

இவ்வகை இலக்கணக்குறிப்பில் இரண்டு வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கும். இரண்டு வார்த்தைகளிலும் "உம்" என்ற சொல் நேரடியாக தெரிய வந்தால் அது எண்ணும்மை ஆகும்.

உதாரணம் : நகையும் உவகையும், கேடும் சாக்காடும்

இன்னும் சில இலக்கணக்குறிப்புகள் ......


முற்றும்மை :   எல்லார்க்கும், இரண்டும், முப்பழமும்

உயர்வு சிறப்பும்மை
: வானினும், நிலத்தினும் ...

இழிவு சிறப்பும்மை
: தெருவார்க்கும், செயினும்...

பெயரெச்சம் : தெளிந்த, விளைந்த

எதிர்மறைப் பெயரெச்சம்
: ஒழியாத, உயராத, செல்லாத

உரிச்சொற்றொடர்
: கடிமணம், மாநிலம் ....

No comments:

Post a Comment