Thursday, September 13, 2018

எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

நாம் தமிழில் பேசும் வாக்கியங்களை கட்டளை வாக்கியம், உணர்ச்சி வாக்கியம், வியங்கோள் வாக்கியம், நேர்கூற்று/அயற்கூற்றூ வாக்கியம், செய்தி வாக்கியம், எதிர்மறை வாக்கியம், உடன்பாட்டு வாக்கியம் என வகைப்படுத்தகலாம். இவ்வகை வினாக்களில் ஒரு சொற்றொடர் கொடுக்கப்பட்டு அதற்கான நான்கு வாக்கிய வகைகள் விடைகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும், இவற்றிலிருந்து சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.

உதாரணம் : நாடு காக்க போரிடு - எவ்வகை வாக்கியம் என கூறுக ?

அ. உணர்ச்சி வாக்கியம்
ஆ.நேர்க்கூற்று வாக்கியம்
இ.கட்டளை வாக்கியம்
ஈ.செய்தி வாக்கியம்

விடை: இ.கட்டளை வாக்கியம்

வாக்கிய வகைகள் உதாரணத்துடன்.

உணர்ச்சி வாக்கியம் - என்னே ! தமிழின் இனிமை
செய்தி வாக்கியம் - உலகம் மிகவும் பெரியது
எதிர்மறை வாக்கியம் - இன்று ராமன் வரமாட்டான்
கட்டளை வாக்கியம் - காலையில் படி, மாலையில் விளையாடு
வியங்கோள் வாக்கியம் - வாழ்க வள்ளுவம் ! வளர்க தமிழினம் !

No comments:

Post a Comment